உதவி
பொதுவான கேள்விகளுக்கான பதில்கள். உங்கள் கேள்வி இல்லையெனில் எங்களுக்கு எழுதுங்கள்.
திருத்தத்தைப் பயன்படுத்துதல்
கேட்காமலே என் உரையை மாற்றுமா?
இல்லை. ஏற்கவும் என்பதைக் கிளிக் செய்யும் வரை எதுவும் மாறாது; இப்போது ஏற்ற மாற்றத்தை உடனே செயல்தவிர்க்கலாம்.
பெயர்களை மாற்றுமா?
எவை பெயர்கள் என்பதை திருத்தத்தால் அறிய முடியாது. அவற்றை உங்கள் பாதுகாக்கப்பட்ட சொற்களில் சேர்த்தால் (உள்நுழைய வேண்டும்) அவை மாற்றப்படாது. எந்தப் பரிந்துரையும் நீங்கள் ஏற்றால் மட்டுமே பயன்படுத்தப்படும்.
Thiruttham விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறதா, AI உதவியுடன் செயல்படுகிறதா?
இரண்டும் உண்டு; எது எப்படிச் செயல்படுகிறது என்பதையும் நீங்கள் அறியலாம். நிலையான விதிச் சரிபார்ப்பும் தமிழ்த் தட்டச்சும் உங்கள் உலாவியிலேயே, கணக்கு தேவையின்றி இயங்கும்; உங்கள் உரை எங்கும் அனுப்பப்படாது. சூழலைப் பொறுத்தவற்றைச் சரிபார்க்க, நீங்கள் உள்நுழைந்து “சரிபார்க்கவும்” என்பதை அழுத்திய பிறகே AI உதவிச் சரிபார்ப்பு இயங்கும். மயங்கொலி எழுத்துகள், எழுவாய்–பயனிலை இயைபு, பேச்சு வழக்குச் சொற்கள் போன்றவற்றை இது சரிபார்க்கும். நீங்கள் ஏற்கும் வரை உரையில் எந்த மாற்றமும் செய்யப்படாது; பரிந்துரையை நிராகரிக்கலாம், சொல்லைப் பாதுகாக்கலாம் அல்லது திருத்தத்தைப் புகாரளிக்கலாம். விதிச் சரிபார்ப்பும் AI உதவிச் சரிபார்ப்பும் எப்போதும் சரியாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கவில்லை.
திருத்தம் எதையெல்லாம் சரிபார்க்கிறது?
முறையான எழுத்துத் தமிழின் எழுத்துப்பிழை, இலக்கணம், சொல் வடிவங்கள். நிலையான விதிகள் ஒற்று மிகுதல், பொதுவான எழுத்துப்பிழைகள் போன்றவற்றைப் பிடிக்கும். AI உதவிச் சரிபார்ப்பு சூழலைப் பொறுத்த இடங்களைப் பார்க்கும். ஒவ்வொரு பரிந்துரையும் அதன் காரணத்தைத் தமிழில் காட்டும்.
எவ்வளவு துல்லியமானது?
விதிச் சரிபார்ப்புகள் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி செயல்படும்; ஆனால் அவையும் சில நேரம் தவறலாம், குறிப்பாகப் பெயர்கள், அரிய சொற்களில். AI உதவிச் சரிபார்ப்புகளும் தவறாகலாம். அதனால் ஒவ்வொரு பரிந்துரையையும் நீங்களே தீர்மானிக்கிறீர்கள். ஒரு திருத்தம் தவறானால், அதன் அட்டையில் உள்ள புகாரளிக்கும் வசதியைப் பயன்படுத்துங்கள்.
உள்நுழைய வேண்டுமா?
விதிச் சரிபார்ப்புகளும் தமிழ்த் தட்டச்சும் கணக்கு இல்லாமலே வேலை செய்யும். AI உதவிச் சரிபார்ப்பு, பாதுகாக்கப்பட்ட சொற்கள், கட்டணம் ஆகியவற்றுக்கு Google மூலம் உள்நுழைய வேண்டும்.
நீட்சி எந்தத் தளங்களில் வேலை செய்கிறது?
இணையப் பக்கங்களில் உள்ள பெரும்பாலான உரைப்பெட்டிகளில், Gmail, WordPress, Blogger எடிட்டர்கள் உட்பட. நீட்சி ஐகானிலிருந்து எந்தத் தளத்திலும் அதை நிறுத்தலாம். Chrome-இன் சொந்தப் பக்கங்களில் அது இயங்காது.
ஆங்கில எழுத்துகளில் தமிழ் தட்டச்சு செய்யலாமா?
ஆம், இணைய எடிட்டரில்; நீட்சியுடன் உரைப்பெட்டிகளிலும் (இது இயல்பாக இயக்கத்தில் இருக்கும்; நீட்சியின் சிறு சாளரத்தில் அணைக்கலாம்). இது சோதனை நிலையில் உள்ளது: நீங்கள் தேர்ந்தெடுக்கத் தமிழ்ச் சொல் வடிவங்களை அது பரிந்துரைக்கும்.
தவறைப் புகாரளிக்க அல்லது புதிய அம்சம் கோர என்ன செய்வது?
எந்தப் பரிந்துரையிலும் அதன் அட்டையில் உள்ள புகாரளிக்கும் வசதியைப் பயன்படுத்துங்கள். புதிய அம்சக் கோரிக்கைகளுக்கும் மற்றவற்றுக்கும் support@thiruttham.com முகவரிக்கு எழுதுங்கள்.
உங்கள் உரையும் தனியுரிமையும்
என் உரை சேமிக்கப்படுகிறதா, AI பயிற்சிக்குப் பயன்படுகிறதா?
உங்கள் உரை AI மாதிரிகளைப் பயிற்றுவிக்க ஒருபோதும் பயன்படுத்தப்படாது. ஒரே வாக்கியத்தை இருமுறை சரிபார்ப்பதைத் தவிர்க்க, சரிபார்த்த ஒவ்வொரு வாக்கியமும் 30 நாட்கள் வரை என்க்ரிப்ட் செய்யப்பட்டு வைக்கப்பட்டுப் பின் தானாக நீக்கப்படும். அதை யாரும் படிப்பதில்லை. நீங்களாகப் புகாரளிக்கும் திருத்தங்கள் மட்டும் அதிக காலம் வைக்கப்படும்.
திட்டங்களும் கட்டணமும்
எது இலவசம், எதற்குக் கட்டணம்?
விதிச் சரிபார்ப்புகள் இலவசம், வரம்பற்றவை. இலவசத் திட்டத்தில் தினமும் 5 AI திருத்தங்கள் கிடைக்கும்; AI ஒரு உரையின் முதல் 500 சொற்களைப் படிக்கும், நாளொன்றுக்கு அதிகபட்சம் 1,000 சொற்கள்; இந்திய நேரப்படி நள்ளிரவில் நாள் புதுப்பிக்கப்படும். அந்த 5-க்கு மேலான AI பரிந்துரைகள் உங்கள் உரையில் திருத்தம் இல்லாமல் புள்ளிக் கோடுகளாகக் காட்டப்படும்; Pro அவற்றைத் திறக்கும். Pro மாதம் ₹299 அல்லது ஆண்டுக்கு ₹2,799: நாளொன்றுக்கு 5,000 புதிய சொற்கள் என்ற நியாயப் பயன்பாட்டு வரம்புக்குள் வரம்பற்ற AI திருத்தங்கள், அந்த நியாயப் பயன்பாட்டுக்குள் பகுதிகளாகச் சரிபார்க்கப்படும் நீண்ட உரைகள், கடினமான பேச்சு வழக்கு வடிவங்கள் உட்பட ஒவ்வொரு AI பரிந்துரையும் திறந்திருக்கும், வேர்ட் (.docx) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி. பொதுவான பேச்சு வழக்குச் சொற்களுக்கான எழுத்து வடிவப் பரிந்துரைகள் அனைவருக்கும் கிடைக்கும். புதிய கணக்கைத் தொடங்கியவர்கள், எடிட்டர் அல்லது சந்தா பக்கத்திலிருந்து ஒருமுறை 7 நாள் Pro சோதனையைத் தொடங்கலாம். இதற்குக் கட்டணம் தேவையில்லை. முதல் 50 சந்தாதாரர்கள், சந்தா தொடரும் வரை மாதம் ₹199 செலுத்துவார்கள்.
எப்படி ரத்து செய்வது, பணம் திரும்பப் பெறலாமா?
உங்கள் கணக்கிலிருந்து எப்போது வேண்டுமானாலும் சந்தாவை ரத்து செய்யலாம்; நீங்கள் கட்டணம் செலுத்திய காலம் முடியும் வரை Pro செயல்படும். வாங்கிய பிறகு பொதுவாகப் பணம் திரும்ப வழங்கப்படாது. எனவே முதலில் 7 நாட்கள் Pro-வை இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள். தவறான கட்டணம், இரட்டைக் கட்டணம் அல்லது கட்டணம் செலுத்திய பிறகும் சந்தா செயல்படாத நிலை ஏற்பட்டால் பணம் திரும்ப வழங்கப்படும். முழு விவரங்களுக்கு பணம் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்து விதிகள் பக்கத்தைப் பார்க்கவும்.
கட்டணம் எப்படிச் செலுத்துவது?
கட்டணங்கள் Razorpay வழியாகச் செல்லும்; UPI AutoPay முதன்மை வழி; வேறு கட்டண வழிகள் இருந்தால் கட்டணப் பக்கத்தில் காட்டப்படும். சந்தாக்கள் தானாகப் புதுப்பிக்கப்படும்; நீங்கள் செலுத்தும் முன் கட்டணப் பக்கத்தில் தொகையும் அடுத்த கட்டணத் தேதியும் காட்டப்படும். உங்கள் அட்டை அல்லது வங்கி விவரங்களை நாங்கள் சேமிப்பதில்லை.
மேலும்
எங்களுக்கு எழுதுங்கள்: support@thiruttham.com