ஆங்கில எழுத்துகளில் தமிழைத் தட்டச்சு செய்யுங்கள்
ஆங்கில எழுத்துகளில் ஒரு தமிழ்ச் சொல்லைத் தட்டச்சு செய்யவும். எடுத்துக்காட்டாக, vanakkam என்று தட்டச்சு செய்து Space அழுத்தவும். அது தமிழ் எழுத்துகளாக மாறும். எல்லா செயல்பாடுகளும் உங்கள் உலாவியிலேயே நடைபெறும்; நீங்கள் இங்கு தட்டச்சு செய்வது எதுவும் எங்கும் அனுப்பப்படாது.
இது எப்படிச் செயல்படுகிறது?
- ஆங்கில எழுத்துகளில் ஒரு சொல்லைத் தட்டச்சு செய்யவும். இரண்டு எழுத்துகளைத் தட்டச்சு செய்ததும், அந்தச் சொல்லின் கீழே தமிழ் எழுத்து வடிவங்களின் பட்டியல் திறக்கும்.
- தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி ஒரு இடைவெளியைச் சேர்க்க Space அழுத்தவும். வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்க மேல் மற்றும் கீழ் அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும்.
- இடைவெளி சேர்க்காமல் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்த Enter அல்லது நிறுத்தற்குறியை அழுத்தவும்.
- நீங்கள் தட்டச்சு செய்த ஆங்கிலச் சொல்லை அப்படியே வைத்திருக்க Escape அழுத்தவும். எடுத்துக்காட்டாக, ஒரு பெயரைத் தட்டச்சு செய்யும்போது இதைப் பயன்படுத்தலாம்.
- மாற்றத்தைச் செயல்தவிர்க்க Ctrl+Z அழுத்தவும்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- இது எழுத்து வடிவங்களைப் பரிந்துரைக்கும்; அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பட்டியலில் முதலாவதாக வரும் வடிவம் எப்போதும் நீங்கள் விரும்பும் வடிவமாக இருக்காது. எனவே, பட்டியலைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவும்.
- இதே தட்டச்சு வசதியை இணையத் திருத்தியிலும் பயன்படுத்தலாம். Chrome நீட்டிப்பைப் பயன்படுத்தினால், பிற இணையதளங்களின் உரைப்பெட்டிகளிலும் தட்டச்சு செய்யலாம். தேடல் பெட்டிகளிலும் உள்நுழைவுப் பெட்டிகளிலும் இது செயல்படாது.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தை கலந்து எழுதும்போது, அமைப்புகளில் தமிழ் தட்டச்சை முடக்கலாம்.
சரிபார்த்தவர்: Midhunan · 2026-10-24