Chrome-இல் Thiruttham
Thiruttham Chrome நீட்டிப்பு, நீங்கள் ஏற்கெனவே எழுதிக்கொண்டிருக்கும் உரைப்பெட்டியிலேயே உங்கள் தமிழைச் சரிபார்த்து, பரிந்துரைகளை Chrome-இன் பக்கப் பலகையில் காட்டுகிறது.
எவ்வாறு செயல்படுகிறது
- உரைப்பெட்டிக்குள் சொடுக்கவும். அதன் மூலையில் சிறிய Thiruttham பொத்தான் தோன்றும்.
- சரிபார்க்க அந்தப் பொத்தானை அழுத்தவும். நிலையான விதிகள் உங்கள் உலாவியிலேயே இயங்கும்.
- பரிந்துரைகள் பக்கப் பலகையில் ஒவ்வொன்றும் தனித்தனி வரியாகவும், அதற்கான காரணத்துடனும் தோன்றும். உங்கள் உரையில் அந்தச் சொல் இருக்கும் இடத்தைப் பார்க்க, அந்த வரியை அழுத்தவும்.
- ஒவ்வொரு பரிந்துரையையும் ஏற்கவும் அல்லது நிராகரிக்கவும். ஏற்ற மாற்றத்தை உடனடியாகச் செயல்தவிர்க்கலாம்.
எங்கு செயல்படுகிறது
- Gmail, WordPress மற்றும் Blogger-இன் தொகுப்பிகள், மேலும் இணையத்தளங்களில் உள்ள பெரும்பாலான உரைப்பெட்டிகள். தேடல், உள்நுழைவு போன்ற உரைப்பெட்டிகளில் இது தோன்றாது; ஒவ்வொரு தளத்திலும் இதை முடக்கலாம்.
- கணினியில் Chrome மற்றும் Chromium அடிப்படையிலான பிற உலாவிகள். தொலைபேசியில் இதை நிறுவ முடியாது; அங்கு இணைய உரைத்தொகுப்பியைப் பயன்படுத்தலாம்.
- Google Docs இன்னும் ஆதரிக்கப்படவில்லை.
கேட்கும் அனுமதிகளும் அவற்றுக்கான காரணங்களும்
- Google மூலம் உள்நுழைதல்: AI உதவிச் சரிபார்ப்பில் உங்கள் கணக்கைப் பயன்படுத்துவதற்காக.
- பக்கப் பலகை: பரிந்துரைகளைக் காட்டுவதற்காக.
- சேமிப்பகம்: உங்கள் சாதனத்தில் அமைப்புகளைச் சேமிப்பதற்காக.
- இணையப் பக்கங்களில் இயங்குதல்: உரைப்பெட்டிகளில் பொத்தான் தோன்றுவதற்காக. நீங்கள் தட்டச்சிடும்போதே தமிழ்த் தட்டச்சு உங்கள் உலாவியில் மாற்றப்படுகிறது; இதற்காக உரை எதுவும் அனுப்பப்படாது. உள்நுழைந்த பிறகு AI உதவிச் சரிபார்ப்புக்காக “சரிபார்க்கவும்” என்பதை அழுத்தும்போது மட்டுமே உரைப்பெட்டியின் உரை அனுப்பப்படும்.
- thiruttham.com: இணையதளத்தில் நீங்கள் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை நீட்டிப்பு அறிந்துகொள்வதற்காக.
இலவசம் மற்றும் Pro
நிலையான விதிச் சரிபார்ப்புகள் இலவசமாகவும் வரம்பின்றியும் கிடைக்கும். கணக்கு வைத்திருந்தால், நாள்தோறும் AI உதவியுடன் 5 திருத்தங்களைப் பெறலாம். மேலும், கட்டணம் செலுத்தாமல் ஒருமுறை 7 நாள் Pro சோதனையை நீங்களே தொடங்கலாம். Pro-வின் கட்டணம் மாதத்திற்கு ₹299 அல்லது ஆண்டிற்கு ₹2,799.
விதிகளும் AI-யும் தவறாக இருக்கலாம். நீங்கள் ஏற்கும் வரை எதுவும் மாறாது; தவறான திருத்தத்தை அதன் அட்டையிலிருந்தே புகாரளிக்கலாம்.
சரிபார்த்தவர்: Midhunan · 2026-10-24